அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர், செருப்பால் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் சாந்தி என்பவர், அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகள் கழிவறையை திறந்து விட்டதாக கூறி, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ஆசிரியர் தாக்கியதாக மனித உரிமை ஆணையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மாணவிகளை ஆசிரியர் சாந்தி தாக்கியது உறுதியானது..