Sivagangai 
மாவட்ட செய்திகள்

சமத்துவபுரத்தில் பொது மயானம் இல்லாததால் மக்கள் அவதி... அருகில் உள்ள கிராமங்களுக்கு உடலை தூக்கி செல்லும் நிலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தில் பொது மயானம் இல்லாததால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Web Team

முதலமைச்சரால் 2022 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் தற்போது 100 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,

மயானம் அமைத்து தரக் கோரி 5 முறை போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.