war flight fly down 
மாவட்ட செய்திகள்

கிராம பகுதிகளில் தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் 8 முறை தீப்பொறி கீழே விழுந்ததாக மக்கள் தகவல்.. போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தாழ்வாக பறந்த போர் பயிற்சி விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தாழ்வாக பறந்த போர் பயிற்சி விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி, வேள்விமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியளவில் போர் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 2 விமானங்கள் மூன்று முறை தாழ்வாக பறந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் விமானங்களில் இருந்து 8 முறை தீப்பொறி கீழே விழுந்ததால் அச்சமடைந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து பயிற்சிக்காக போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.