மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகாவில் 4 கிராம மக்களின் எதிர்ப்பை மீறி 3 கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக்கோரி, குவாரிக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் கிராம மக்கள் பெரிய பள்ளத்தை தோண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரியில் இருந்து அனுமதிச்சீட்டு இல்லாமல் வந்த 3 லாரிகளை சிறைபிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.