40 
மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்... இளைஞரை தாக்கிய மற்றொரு சமூகத்தினர் மீது புகார்

கடலூர் மாவட்டம் அம்பலவாணன்பேட்டையில், ஒரு சமூக்கத்தை சேர்ந்த இளைஞரை தாக்கிய மற்றொரு சமூகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் அம்பலவாணன்பேட்டையில், ஒரு சமூக்கத்தை சேர்ந்த இளைஞரை தாக்கிய மற்றொரு சமூகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முருகவேல் என்ற இளைஞரை சிலர் தாக்கி சாலையில் இழுத்து சென்ற வீடியோ பரவிய நிலையில், அவரை தாக்கிய 50 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 4 பேரை மட்டுமே போலீசார் கைது செய்ததால், மீதமுள்ளவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து எஸ்.பி ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர்.