பொள்ளாச்சி குற்றவாளிகள் மேல்முறையீடு செய்து தப்பித்து விடக்கூடாது என்பதில் சட்டம் கவனமாக இருக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாகத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், இவ்வளவு விசாரணைகளுக்கு பின் தீர்ப்பு வந்துள்ளதாகவும், மேல்முறையீட்டுக்கு பின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அது சமுதாயத்தையே பாதித்துவிடும் என கூறினார்