நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது விழிபிதுங்கி நிற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பெயரில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய இபிஎஸ், திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகம் கலவர பூமியாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.