CDL Seawagwe water 
மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

ஆர்எஸ் மணி நகரில் 5 நாட்களாகியும் வடியாத மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை

Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் குப்பைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

எல்என்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்எஸ் மணி நகரில் 5 நாட்களாகியும் வடியாத மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்த மக்கள், அதனை அகற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.