திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. செய்யாறு, புளியரம்பாக்கம், திருவோத்தூர், கீழ் புதுப்பாக்கம், இருமந்தாங்கல், மாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பருவமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.