RMD Rain water issue 
மாவட்ட செய்திகள்

தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

Web Team

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையில், தென்குடா பகுதியில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து, தற்போதுவரை வடியாமல் உள்ளதாகவும், மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.