திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மாட வீதியை சுற்றி நடைபாதையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், கடைகளில் இருந்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றனர்.