கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலக பயன்பாட்டிற்கு வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை மற்றும் நீரேற்று குழாய்களை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு, நீதிபதிகள் எஸ். எம்.சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொழிலக பயன்பாட்டுக்கும் கொள்ளிடம் நீர் வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.