birds 
மாவட்ட செய்திகள்

வலசை வந்துள்ள ரோஸி டார்லிங் பறவைகள்

ரோஸி டார்லிங் பறவைகளை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

Web Team

தூத்துக்குடிக்கு வலசை வந்துள்ள அரிய வகை இனமான ரோஸி டார்லிங் பறவைகள் சுற்றி திரியும் அழகை கண்டு பறவையியல் ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்தனர். இனப்பெருக்கத்திற்காக வடமேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து, தூத்துக்குடிக்கு வந்துள்ள இந்த பறவைகள் வலசை முடிந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும். நகரில் உள்ள காலி மனைகள், மரங்கள், நீர்நிலைகளில் பெரும் கூட்டமாக காணப்படும் இந்த பறவைகள் காண்போரை ரசிக்க செய்துள்ளது.