திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 3 கொலைகள் உள்ளிட்ட 14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எபினேசனின் கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.வெள்ளவேடு பகுதியில் ரவுடி ஆகாஷ் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் மடக்கிபிடித்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.