சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 160 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 109 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.