சிவகங்கை எஸ்.பி. அலுவலக ஊழியர் ஒருவரிடம் காதல் வலையில் சிக்கியுள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டு தரக்கோரி கணவன் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். மலைகண்டானை சேர்ந்த மலேசியாவில் பணிபுரிந்து வரும் பரதின், மனைவி ஸ்ரீவிருக் ஷா விசா நீட்டிப்புக்காக சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த போது, பாஸ்போர்ட் பிரிவில் உள்ள பிரசாந்துடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.