தீபாவளி பண்டிகையை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆயிரத்து எட்டு லிட்டர் பால் அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சீகைக்காய், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளை கொண்டும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.