1 
மாவட்ட செய்திகள்

வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.. வாத்தியங்களை இசைத்தும், நடனமாடியும் பழங்குடி மக்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

Srini Vasan

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள முகாமிற்கு வருகை தந்த அவருக்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்தும் நடனமாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

யானைகள் முகாமில் இருக்கும் பாகன்கள் 44 பேருக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார்.

ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு என்ற யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியினருடன் கலந்துரையாடிய முதல்வர், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.