பெட்ரோல் குண்டு 
மாவட்ட செய்திகள்

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்ட சம்பவம்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவமே இது ஆகும் பெட்ரோல் குண்டு வீச்சு என இந்த சம்பவத்தில் எதுவும் நடைபெறவில்லை

Manigandan Raja

பெட்ரோல் குண்டு வீசியதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது கைதான பெண்ணின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார் -நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் . மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் கடந்த இருபதாம் தேதி தனது மகள் காணாமல் போனதாக மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுருளை கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விருப்பப்பட்டு அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டதாக கடந்த 21 ஆம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இருதரப்பினரிடமும் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் தனது மகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட வீட்டிற்கு நேற்று சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் வழியாக பெட்ரோலை வீட்டுக்குள் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

தீ வைத்த சம்பவத்தில் முருகன் ஈடுபட்டதை பார்த்த சிலர் முருகனைத் தாக்கியதில் அவருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முருகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.

சிகிச்சையில் இருக்கும் முருகன் மீது வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.முருகன் காயமடைந்தது தொடர்பாக முருகனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு வேறு வழக்குகளும் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. சிகிச்சையில் இருக்கும் முருகனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆள் இல்லாத வீட்டில் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவமே இது ஆகும் பெட்ரோல் குண்டு வீச்சு என இந்த சம்பவத்தில் எதுவும் நடைபெறவில்லை அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது.