கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தக சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து பரிசீலிக்கும் வரை கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.