பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு இதுவரை பில் பணம் வரவில்லை எனக் கூறி, 2 பெண் குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்தன், கடந்த 2020-ம் ஆண்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய நிலையில், இதுவரை 3 பில்களுக்கான பணம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, தனது இரு மகள்கள் மதுமிதா, தீபிகா ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.