klk selvaperunthgai 
மாவட்ட செய்திகள்

திமுக- காங்கிரஸ் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

ராகுல்காந்தி - விஜய் உடனான பேச்சுவார்த்தை என்பது பழைய கதை என்று செல்வப்பெருந்தைகை கூறினார்.

Web Team

தேர்தல் தொடர்பான, திமுக - காங்கிரஸ் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் பொது கணக்குக்குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாக தெரிவித்தார். இன்னும் ஒரு சில நாட்களில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக கூறியவர், ராகுல்காந்தி - விஜய் உடனான பேச்சுவார்த்தை என்பது பழைய கதை என்று செல்வப்பெருந்தைகை கூறினார்.