ஒரு சிலரை ஜாதி பெயரை வைத்து அழைத்தால் தான் அடையாளம் தெரியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தெருக்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இருப்பினும் கோவை மேம்பாலத்திற்கு தலைசிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டது பலவேறு விமர்சனங்களை பெற்றது.தஞ்சையில் இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கோ.வி.செழியன், ஒரு சிலருக்கு ஜாதி பெயர் தான் தான் அடையாளம் என்றும், அதனால் மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.