ravi 
மாவட்ட செய்திகள்

பத்மஸ்ரீ வேலு ஆசான் உடன் இணைந்து பறை இசைத்த ஆளுநர்

வேலு ஆசான் தொடங்கிய பாரதி பறை பண்பாட்டு மையம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்

Web Team

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பத்மஸ்ரீ வேலு ஆசான் தொடங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், வேலு ஆசானுடன் சேர்ந்து ஆளுநர் ரவி, பறை இசைத்து மகிழ்ந்தார். ஆளுநர் விருப்ப நிதியில் பத்ம ஸ்ரீ வேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.