TNL Mayanam 
மாவட்ட செய்திகள்

மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தரக்கோரி மறியல்

பாப்பான் கால்வாயை கடந்து இறந்தவர்கள் சடலத்தை எடுத்துச் செல்வதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Web Team

தென்காசி மாவட்டம் பாப்பான்குளத்தில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தரக்கோரி இறந்தவரின் சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அவர்கள் மறியலை கைவிட்டு உடலை அடக்கம் செய்ய சென்றனர். இதனால் அச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், மயானத்திற்கு செல்ல முறையான சாலை இல்லாததால் பாப்பான் கால்வாயை கடந்து இறந்தவர்கள் சடலத்தை எடுத்துச் செல்லவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.