KLK 
மாவட்ட செய்திகள்

சொத்து சேர்க்கவில்லை என பெற்றோரை தாக்கிய மகன்

மது அருந்திவிட்டு வந்து அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

Web Team

சொத்து சேர்த்து வைக்கவில்லை என தாயை அடித்து கொன்ற மகனை விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர். பரனூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் பிரகாஷ்க்கு திருமணமாகி மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்து அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் சொத்து சேர்த்து வைக்காததால் தான் வறுமையில் இருப்பதாக கூறி இருவரையும் கட்டை மற்றும் கற்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.