TNJ Kovil wall issue 
மாவட்ட செய்திகள்

கோவில் திருப்பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Web Team

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் கோவில் திருப்பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிநாத பெருமாள் கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், கோவிலை ஒட்டி வசித்து வரும் தமிழ்மணி, தாமரைச்செல்வி, குழந்தை ஆனந்த கண்ணன் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர்.