நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாரஸ்ட் கேட் செல்லும் சாலையில் மின்கம்பத்தின் மீது மரம் சரிந்து விழுந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மின்கம்பத்திற்கு சேதமில்லாமல் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரத்துக்கு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.