Poonamalle bike accident 
மாவட்ட செய்திகள்

கோழி வாகனத்தின் பின்புறம் மோதிய டூவீலர்

வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், டீக்குடிக்க சென்றபோது விபத்தில் சிக்கினர்.

Web Team

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி வாகனத்தின் பின்புறம் டூவீலர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சென்னீர்குப்பம் குமரன் நகரை சேர்ந்த நிர்மல், சந்தோஷ் ஆகியோர் கல்லூரியில் படித்துக் கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து வந்தனர். வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், டீக்குடிக்க சென்றபோது விபத்தில் சிக்கினர்.