KNC Govt bus seized 
மாவட்ட செய்திகள்

விபத்தில் பலியானவரின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தரவில்லை அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் பலியான வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

Web Team

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் பலியான வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, அரசு பேருந்து மோதி உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை ஏழரை சதவீத வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், 1 லட்சத்து 25 ஆயிரம் பாக்கி இருந்ததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.