TNL Leopard attack 
மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை விரட்டி அடித்த பெண்

வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த போது ஜோயின் மனைவி சுஜிதா பிளாஸ்டிக் கூடையை வைத்து விரட்டியதாக தெரிவித்துள்ளார்.

Web Team

நெல்லை அருகே மாற்றுத்திறனாளி குழந்தை இருந்த வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை பிளாஸ்டிக் கூடை வைத்து தாய் விரட்டி அடித்துள்ளார். காரையாறு அணையின் அடிவாரப் பகுதியில் ஜோய் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த போது ஜோயின் மனைவி சுஜிதா பிளாஸ்டிக் கூடையை வைத்து விரட்டியதாக தெரிவித்துள்ளார்.