கோவை மருதமலை அடிவாரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு, 2 கும்கி யானைகள் உதவியுடன் 5 மருத்துவர்கள்
அடங்கிய மருத்துவக் குழு தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மருந்துகள், கும்கி யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை பாதிக்கப்பட்ட யானையும் உண்பதாகவும், சிகிச்சைக்கு பின் தானாகவே நிற்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ள மருத்துவக் குழு.
யானையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாயிடம் இருந்து பிரிந்து வேறொரு கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்ற குட்டி யானையையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.