நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது ஆம்னி கார் மோதியதில் தாயும், மகளும் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாமக்கல் திருமலைசாமி தெருவை சேர்ந்த பூமதி, தனது 11 வயது மகளுடன் சென்றபோது அவர்கள் மீது மோதிய ஆம்னி காரும் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தாய், மகள், காரில் இருந்த 5 பேரும் காயமடைந்த நிலையில், நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.