நெல்லையில் விஜய் வாக்கு சேகரிப்பு 
மாவட்ட செய்திகள்

நெல்லையில் விஜய் வாக்கு சேகரிப்பு

நெல்லையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

Azhagiri Arumugam

🔴LIVE : TVK Vijay | நெல்லையில் விஜய் ...தொடர் நேரலை | Tirunelveli | 2026 Election

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட காப்பர் லீப் ஹோட்டல் அருகே நண்பகல் 1 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து நெல்லைக்கு சென்றார். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.