Tnj water plant seized 
மாவட்ட செய்திகள்

வின்வே குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதாக புகார்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Srini Vasan

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

வளையப்பேட்டை கிராமத்தில் வின்வே என்ற பெயரில் இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, நீர்வளத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல், போர்வெல் பம்புகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாகவும், தண்ணீரை சுத்திகரித்து வின்வே, கள்ளழகர் என்ற பெயர்களில் குடிநீர் விற்பனை செய்து வருவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்தியா விஜயன் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் ஆலைக்கு சீல் வைத்தனர்.