MDU House theft 
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 22 சவரன் தங்க நகை திருட்டு வெள்ளிப் பொருட்களையும் திருடிய மர்ம நபர்களுக்கு வலை

அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அண்ணாகாலனியை சேர்ந்த மும்தாஜ், வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றிருந்தபோது திருட்டு நடந்துள்ளது.

Web Team

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டு கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அண்ணாகாலனியை சேர்ந்த மும்தாஜ், வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றிருந்தபோது திருட்டு நடந்துள்ளது.