RMP Thailand 
மாவட்ட செய்திகள்

தாய்லாந்தில் கலாச்சார தூதர் பட்டம் பெற்றவருக்கு வரவேற்பு

மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 ல் கலாச்சார தூதராக வெற்றி பெற்றுள்ளார்.

Web Team

தாய்லாந்து நாட்டில் கலாச்சார தூதர் பட்டம் வென்று திரும்பிய இராமநாதபுரம் மாவட்ட பெண்ணுக்கு முதுகுளத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி - அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர், மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 ல் கலாச்சார தூதராக வெற்றி பெற்றுள்ளார்.

சொந்த ஊர் திரும்பிய அவருக்கு அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் என ஏராளமானோர் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.