CHN Drainage water issue 
மாவட்ட செய்திகள்

புறநகர் பகுதியில் பரவலாக பெய்த கனமழை

பூந்தமல்லி ட்ரங்க் சாலை மற்றும் பாரிவாக்கம் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

Web Team

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக அரைமணி நேரம் பெய்த கனமழையால், பூந்தமல்லி அருகே வரதராஜபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் புகுந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, பூந்தமல்லி ட்ரங்க் சாலை மற்றும் பாரிவாக்கம் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.