NGL Elephant 
மாவட்ட செய்திகள்

கிராம பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

வழி தவறிய காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் தேயிலை பறிக்க தனியாக செல்ல வேண்டாம்

Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குளா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் வழி தவறிய காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் தேயிலை பறிக்க தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள் கக்குளா கிராமத்தை ஒட்டியே சுற்றி கொண்டிருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்துள்ள கோத்தகிரி வனத்துறையினர் யானைக் கூட்டத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.