3 
மாவட்ட செய்திகள்

தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ.. 3 இடங்களில் 300 ஏக்கர் வனப்பகுதியில் பற்றிய தீ

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மூன்று இடங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் தீப்பற்றி எரிந்தன.

Srini Vasan

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மூன்று இடங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் தீப்பற்றி எரிந்தன.

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் வசித்து வரும் ஏராளமான காட்டெருமைகள் மற்றும் மான்கள் உள்ளிட்டவை பாதிப்புக்கு உள்ளாகின.

மரங்கள் அனைத்தும் காய்ந்து காணப்படுவதால் தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.