SLM Thiruttu lady 
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் பெண் கைது

ரமணியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து, 33 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Web Team

சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில், 23 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண்ணை எடப்பாடி போலீஸார் கைது செய்தனர். எடப்பாடி பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை 40 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட தொடர்பாக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ரமணியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து, 33 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.