DGL Pocso 
மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது

நீண்ட போராட்டத்திற்கு பின் சுதர்சனிடமிருந்து தப்பி கொடைக்கானல் வந்த சிறுமி அளித்த புகாரில் சுதர்சன் கைது

Web Team

கொடைக்கானல் அருகே சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டான். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு கொடைக்கானல் அருகே வசிக்கும் சிறுமி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை சென்னைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் கடந்த வருடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் சுதர்சனிடமிருந்து தப்பி கொடைக்கானல் வந்த சிறுமி அளித்த புகாரில் சுதர்சன் கைது செய்யப்பட்டான்.