திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சின்ன வெங்காயப்பள்ளி குறும்பர் வட்டம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர், தனது உறவினரான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறவே, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் கோபாலை கைது செய்தனர்.