Chennai 
மாவட்ட செய்திகள்

விளம்பரப் பலகையின் மேல் ஏறி நின்று இளைஞர் மிரட்டல் .... போதை இளைஞரை ஒரு மணி நேரம் போராடி இறக்கிய போலீசார்

சென்னை போரூரில் விளம்பர பலகையில் மேல் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய போதை இளைஞரை போலீசார் ஒரு மணி நேரமாக போராடி கீழே இறங்க வைத்தனர்.

Web Team

சென்னை போரூரில் விளம்பர பலகையில் மேல் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய போதை இளைஞரை போலீசார் ஒரு மணி நேரமாக போராடி கீழே இறங்க வைத்தனர்.

சிபிராஜ் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது தம்பி விஷால் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

பத்து நாட்களாகியும் அண்ணனை கண்டுபிடிக்கவில்லை எனக்கூறி, விஷால் விளம்பரப் பலகை மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.