கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள தூவால் அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட இளைஞரை உள்ளூர் மக்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் பகுதியில் தூவால் அருவி உள்ளது. இங்கு சுற்றுலாவுக்கு வந்த மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்து பாறையின் இடையில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட அவரது நண்பர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.