தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.
முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீடு பெற்ற கீழ் சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 9 முதல் 11 ஆம் தேதி வரை பொது பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெற்று. ஆகஸ்ட் 26 ம் தேதி நிறைவடைகிறது.