Sri lanka 
இந்தியா

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்கள்

2 வாரங்களாகியும் இலங்கை தூதரகத்தில் தவித்து வருவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் ஏறெடுத்து பார்க்கவில்லை

Web Team

இந்திய தூதரக அதிகாரிகள் தங்களை சந்தித்து தாயகம் அழைத்து வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 31 பேரை, இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி விடுதலை செய்தது. 2 வாரங்களாகியும் இலங்கை தூதரகத்தில் தவித்து வருவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் ஏறெடுத்து பார்க்கவில்லை எனவும் தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.