அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை காயமடைந்தது. டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானைக் கூட்டம் மீது மோதியது. நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த விபத்தையடுத்து ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், பயணிகள் எவரும் காயமடையவில்லை.