Maharastra 
இந்தியா

காரில் வைத்து எரித்து கொல்லப்பட்ட வங்கி ஊழியர்

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Team

மகாராஷ்டிர மாநிலத்தில் வங்கி ஊழியரை சாக்கு மூட்டையில் கட்டி காரில் வைத்து உயிருடன் எரித்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. லாத்தூர் மாவட்டத்தில் கணேஷ் சவான் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், அவரது காரில் எரித்து கொல்லப்பட்டார். ஐசிஐசிஐ வங்கியின் கடன் வசூலிக்கும் முகவராக பணிபுரிந்து வந்த அவர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.