15 
இந்தியா

பாகிஸ்தானின் தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படாத பிரகடனம்..

பஹல்காம் பயங்கரவாத தாக்குலுக்கு பாகிஸ்தான் மீது நேரடியாக குற்றம் சாட்டாமல் தயாரான பிரிக்ஸ் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது மத்திய பாஜக கூட்டணி அரசின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த தோல்வி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Team

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக பிரிக்சின் ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் உள்ள பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் பற்றி பிரகடனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.